அரசியல்உள்நாடு

முன் பிணை கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார மனு தாக்கல் செய்தார்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தான் கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்பிணையில் தன்னை விடுவிக்கக் கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை மனு ஒன்றை முன்னாள் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு இன்று (26) கொழும்பு பிரதான நீதவான் அசங்க.எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மனுஷ நாணயக்காரவின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, விவசாய வேலைகளுக்காக இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பியதாகக் கூறப்படும் முறைகேடு குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை நடத்தி வருவதாகக் கூறினார்.

கடந்த 24ஆம் திகதி தனது கட்சிக்காரர் டுபாயில் இருந்து இலங்கை வந்தபோது, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள், மேற்கூறிய விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு கோரி கடிதம் ஒன்றை வழங்கியதாக ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.

இது தொடர்பாக, தனது கட்சிக்காரரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைது செய்வதற்கு முன்னர், அவரை முன்பிணையில் விடுவிக்க உத்தரவிடுமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான், குறித்த முன்பிணை மனுவில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு, இந்த மாதம் 2ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை வழங்க உத்தரவிட்டார்.

Related posts

கொவிட் நோயாளிகள் எண்ணிக்கை 76,000 ஐ கடந்தது

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்திற்கு சென்ற அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்

editor

புத்தளத்தில் கொரோனாவிற்கு இலக்கான நபர் குணமடைந்தார்