உள்நாடுபிராந்தியம்

காலியில் பலத்த மழை – பல வீதிகள் நீரில் மூழ்கியது

இன்று (24) மாலை பெய்த பலத்த மழை காரணமாக காலி நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கியதாக தெரிய வருகிறது

காலி – வக்வெல்ல பிரதான வீதி காலி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் நீரில் மூழ்கியதுடன், காலி – பத்தேகம மாபலகம பிரதான வீதி தலாபிட்டிய பகுதியில் நீரில் மூழ்கியது.

அத்துடன் சரேன்துகடே மற்றும் தனிபொல் கங்க சந்தி ஆகிய பகுதிகளும் நீரில் மூழ்கின.

இதற்கிடையில், காலி நகரின் பல கிளை வீதிகளும் நீரில் மூழ்கிய நிலையில், வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வடிகால் அமைப்புகளை முறையாக சுத்தம் செய்யாததாலும், மழைநீர் வடிந்தோடும் பிரதான வடிகால்களில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் கட்டப்படுவதாலும் இதுபோன்ற சூழ்நிலைகள் அடிக்கடி ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விளக்கினார் – முஜிபுர் ரஹ்மான்

போசாக்கின்மையால் சிறுவர்கள் கடுமையாக பாதிப்பு!

இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor