பிரதி அமைச்சர் ஒருவர் உத்தியோகபூர்வ பதவியைக் கொண்டிருப்பவராக இருப்பதால், அவருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதில் எந்தவிதத் தடையும் இல்லை என்பதைக் குறிக்கும் வகையில் செயலாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
இதனால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏற்க முடியாது என்று உறுதிப்படுத்திய அறிவிப்பு ஊடாக அந்த தர்க்கம் தகர்க்கப்பட்டுள்ளது.
அத்துடன், சட்ட மா அதிபர் தரப்பின் விளக்கத்தின்படி இதற்கு சட்ட ரீதியான எந்தத் தடையும் இல்லையென்பதும், Erskine May பாராளுமன்ற சம்பிரதாயங்களின் படி ஒரு குழுவாக அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டுவரப்படுவது போலவே தனிநபர் அமைச்சர்களுக்கும் எதிராக கொண்டு வர முடியும் என்பதனை அவர் வாசித்து பார்த்தாரா என்று தெரியவில்லை.
இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் அதிகாரிகள் மட்டுமின்றி, பதவி வகிப்பவர்களுக்கும் எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை கொண்டு வர முடியும்.
அத்துடன் தற்போதைய அரசாங்கம் தமக்குத் தேவையானபடி அனுர பண்டாரநாயக்கவின் சம்பிரதாயங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றது.
ஆனால் அனுர பண்டாரநாயக்கவினால் எதிர்க்கட்சித் தலைவர் எழும்போது அவருக்கு கருத்து தெரிவிக்க அனுமதித்தார் ஆனால் இவர்கள் இன்று அவ்வாறு கருத்துத் தெரிவிக்க வாய்ப்பளிப்பதில்லை.
எதிர்க்கட்சி பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக மற்றும் அஜித் பி. பெரேரா ஆகியோர் தர்க்க ரீதியாக கருத்துக்களை தெரிவிக்கும் போது அவர்களை பார்த்து “சிறுபிள்ளைத் தனமாக பேச வேண்டாம்” என்று கூறுகின்றனர்.
சிறுவர்களின் உரிமைகளைப் பற்றி பேசிய பின், இன்று பாராளுமன்ற உறுப்பினர்களிடம் குழந்தைகள் போல பேச வேண்டாம் எனச் சொல்லி, அந்த உரிமையையே கிண்டல் செய்கின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.
