செப்டம்பர் 23 ஆம் திகதியில் அமைந்து காணப்படும் சவூதி அரேபியாவின் தேசிய தினத்தை நினைவுகூரும் முகமாக இனம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களும் பங்கேற்றார்.
சவூதி அரேபிய தூதரகத்தின் அழைப்பின் பேரில், கொழும்பில் உள்ள ITC ரத்னதீப ஹோட்டலில் நேற்று மாலை இடம்பெற்ற வரவேற்பு கொண்டாட்ட நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்.
உள்நாட்டு, வெளிநாட்டு தூதர்கள், அரசியல்வாதிகள் மற்றும் இராஜதந்திர பிரதிநிதிகள் உட்பட பல சிறப்பு விருந்தினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 50 ஆண்டுகளை கடக்கும் சிறப்புத் தருணத்திலயே, சவூதி அரேபியாவின் 95 ஆவது தேசிய தினம் இவ்வாறு கொண்டாடப்பட்டது.
இந்தக் காலகட்டங்களில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சியிலும், உட்கட்டமைப்பு மற்றும் சமூக சேவை பரப்பிலும் சவூதி அரேபியா குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
