களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவின் சிகாகோவில் இணைந்து நடத்தி வரும் தர்கா நகர் நலன்புரிச் சங்கம், சமீபத்தில் இனிமையும் உற்சாகமும் நிறைந்த சிநேக பூர்வ ஒன்று கூடலை வெற்றிகரமாக நடத்தியது.
இந்த சங்கத்தில் தர்கா நகர் ஸாஹிராக் கல்லூரி மற்றும் அல் ஹம்ரா பாடசாலை பழைய மாணவர்கள் தற்போது சிகாகோவில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமது ஊரின் அபிவிருத்திக்கும், கல்வி முன்னேற்றத்திற்கும் பங்களிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடன் நடைபெற்ற இச் சந்திப்பு, அனைவருக்கும் மறக்க முடியாத மகிழ்ச்சியூட்டும் தருணமாக அமைந்தது.
நிகழ்வின் சிறப்பம்சமாக,
🔹 சஹ்ரியன் (ஸாஹிராக் கல்லூரி பழைய மாணவர்கள்)
🔹 ஹம்ரியன் (அல் ஹம்ரா பாடசாலை பழைய மாணவர்கள்)
அணிகள் இடையே நட்பு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
சுவாரசியம் நிறைந்த ஆட்டத்தில் சஹ்ரியன் அணி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியான வெற்றியைத் தக்க வைத்தது!
கல்வி முன்னேற்றத்திற்கான பல்வேறு உதவித் திட்டங்கள் குறித்தும் இச்சந்திப்பில் ஆர்வமுடன் கலந்துரையாடப்பட்டது.
மேலும், இக்கலந்துரையாடல் மற்றும் கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்காக இலங்கைச் சேர்ந்த பலரும் ஆர்வத்துடன் ஒத்துழைப்பு வழங்கியது, அனைவரின் மனதையும் ஆழமாக தொட்டது.
பழைய பள்ளி நினைவுகளையும், ஒற்றுமையையும், பாசத்தையும் வெளிப்படுத்திய இந்நிகழ்வு, பங்கேற்ற அனைவரின் இதயத்திலும் அழியாத இனிய நினைவாக பதிந்துள்ளது.
-ஏ.எஸ்.எம்.அர்ஹம்
