அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கை ஜனாதிபதிக்கும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவுக்கு (Cyril Ramaphosa) இடையிலான சந்திப்பு நியூயோர்க் நகரில் ONE Plaza வில் (23) பிற்பகல் (அமெரிக்க நேரப்படி ) இடம்பெற்றது.

இங்கு, தென்னாபிரிக்க ஜனாதிபதியினால், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அமோகமாக வரவேற்பளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் ஆரம்பமானதோடு இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜெயசூரிய மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

 10 மணிநேர நீர்வெட்டு இன்று!

கல்வி அமைச்சு விடுத்துள்ள விஷேட அறிவித்தல்

குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு