உள்நாடு

கொழும்பு மாநகர சபைக்குள் பொதி செய்யப்பட்ட ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்கள் – ஒருவர் கைது

கொழும்பு மாநகர சபையில் உள்ள தனது அலுவலக அறையில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை பொதி செய்து அதனை அங்குள்ள ஊழியர்களுக்கு விற்பனை செய்த்தாகக் கூறப்படும் மாநகர சபை சாரதி உதவியாளர் ஒருவர் நேற்று முன்தினம் (22) 20,860 மில்லிகிராம் ஐஸுடன் கைது செய்யப்பட்டதாக வலான ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் மாநகர சபை துணைப் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வலான ஊழல் தடுப்பு பிரிவு சந்தேக நபரைக் கைது செய்தது.

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கொழும்பு மாநகர சபையின் மாவட்ட அலுவலகம் 03 இல் சாரதி உதவியாளராகப் பணியாற்றி வருவது தெரிய வந்தது.

Related posts

துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திர நியமனம்

editor

காலி மீன்பிடி துறைமுகத்தில் ஒருவர் பலி

பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்பு