உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – குழந்தைகள் உட்பட 5 பேர் பலி

லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 5 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லெபனானில் குழந்தைகள் மீதான தாக்குதலை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் இன்று அதிகாலை தெற்கு லெபனானில் தாக்குதலொன்றை நடத்தியதாகக் கூறுகிறது.

அதில் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

லெபனானின் தெற்கு நகரமான பின்ட் ஜபீலில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவதாக லொபனானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் தாக்குதலின் இலக்கு ஒரு ஹிஸ்புல்லா உறுப்பினர் என்றும், அவரும் கொல்லப்பட்டதாகவும் அறிக்கையொன்றில், குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த “தாக்குதலின் விளைவாக, சம்பந்தப்படாத பொதுமக்கள் கொல்லப்பட்டனர்” என அந்த நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

Related posts

அமெரிக்காவின் டெக்சாஸில் வெள்ளப்பெருக்கு – 24 பேர் பலி – 25 சிறுமிகளை காணவில்லை

editor

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த ஹெலி விபத்து