உள்நாடு

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படை கப்பல் இன்ஸ் சட்புரா

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘இன்ஸ் சட்புரா’ கப்பல் நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

விநியோகம் மற்றும் சேவைகளுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில், இந்த கப்பல் நாட்டுக்கு வந்ததாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.

நாட்டின் கடற்படை மரபுகளுக்கு அமைய இந்திய கப்பலுக்கு சம்பிரதாய வரவேற்ப ளிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

142.5 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பலில் 403 பணியாளர்கள் வந்துள்ளனர்.

கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும் காலத்தில், இதன் பணியாளர்களை நாட்டின் முக்கியமான பல்வேறு பிரதேசங்களையும் பார்வையிட அழைத்துச் செல்லவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்

Related posts

டொன் பிரியசாதின் உயிரிழப்பை உறுதிப்படுத்திய பொலிஸார்!

Shafnee Ahamed

பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி வெளியானது

இந்திய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை குழாம்