முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சுமார், ரூபாய் 73 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக ஈட்டியதாகக் கூறப்படும் வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கு குறித்த விசாரணைக்கு யோஷித்த மற்றும் அவரது பாட்டி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
பின்னர் வழக்கு விசாரணையை ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
யோஷித்த ராஜபக்ச மற்றும் டெய்சி ஃபொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.