உள்நாடுபிராந்தியம்

சந்தேகத்திற்கிடமான இரசாயனப் பொருட்களை வைத்திருந்த வெளிநாட்டு பிரஜை கைது

வெலிகம, சல்மல் உயன பகுதியில் சந்தேகத்திற்கிடமான இரசாயனப் பொருட்களை வைத்திருந்த வெளிநாட்டு பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மொல்டோவியன் (Moldovian) பிரஜை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேகநபரான மொல்டோவியன் பிரஜை அந்த பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அவர் வைத்திருந்த இரசாயனப் பொருட்கள் எவ்வாறான தேவைக்கு பயன்படுத்தப்படுபவை என தீர்மானிக்கப்படவில்லை.

குறித்த இரசாயன பொருட்கள் தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொள்வார்கள் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட இரசாயனப் பொருட்கள் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

22 இந்தியர்கள் அதிரடியாக கைது!

பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நீதித்துறை மேம்படுத்தப்படும் – பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன

editor

பல்கலைக்கழக மாணவன் கைது