அரசியல்உள்நாடுபிராந்தியம்

உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையின் இறுதி நாள் நிகழ்வு!

வளமான நாடும் – அழகான வாழ்க்கையும்” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும் உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இறுதி நாள் நிகழ்வு இன்று (21) சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி ஒருங்கினைப்புக் குழுத் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நிகழ்வின் கெளரவ அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா கலந்து கொண்டு சிறப்பித்ததோடு சிறப்பு அதிதிகளாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ, ஏ.என்.பிரத்தீப் குமார, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நெளசாத் முஸ்தபா, சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஒரு வார காலமாக இடம்பெற்ற உள்ளூராட்சி வார நிகழ்வுகளின் போது பங்குபற்றியவர்கள் மற்றும் போட்டி நிகழ்ச்சிகளின் போது வெற்றி பெற்றவர்களுக்குமான, பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். என்பதும் குறிப்பிடத்தக்கது.

-தில்சாத் பர்வீஸ்

Related posts

பாராளுமன்றம் கூடியது

அநுரகுமார தாக்கல் செய்துள்ள மனு 20 ஆம் திகதி பரிசீலனைக்கு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 325 நபர்கள் கைது