உள்நாடுபிராந்தியம்

வீரமுனையில் கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸார் – ஒருவர் கைது!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை 03 பகுதியில் சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று (20) சனிக்கிழமை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரினால் முற்றுகையிடப்பட்டது.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனர்.

வீரமுனை 03 பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 60,000 மில்லிலிட்டர் கோடா, கசிப்பு 4,000 மில்லிலிட்டர், ஏ சி கேஸ் சிலிண்டர் 2, ஒரு தொகை ரப்பர் மற்றும் செப்பு குழாய் என்பன மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கு அமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.பிரதிப்குமார தலைமையிலான குழுவினரினால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-தில்சாத் பர்வீஸ்

Related posts

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் வழக்கை விசாரிக்க திகதி அறிவிப்பு

editor

ஜனாதிபதியின் வீட்டுக்கு தீ – மூவர் கைது

எரிபொருளுக்கான விலை சூத்திரம் தொடர்பில் இதுவரை தீர்மானமில்லை