அரசியல்உள்நாடு

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க

அடுத்த ஜனவரி மாதம் அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனாதிபதி சம்பள உயர்வை வழங்குவார் என்று துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, சிவில் விமான போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

25 பேருந்து நிலையங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு கூறினார்.

பேருந்து நிலையங்களில் அதிகமாக வேலை செய்பவர்களுக்கு அதிக ஊதியம் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இந்த நிறுவனங்கள் மக்களுக்கு முழுமையாக சேவை செய்யும் திறமையான நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Related posts

போலி ஆவணம் குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

editor

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் இன்று

editor

அனைத்து சிறைச்சாலைகளும் PCR பரிசோதனைக்கு தயார் நிலையில்