உள்நாடுபிராந்தியம்

மருதமுனை பொது நூலகத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி வார நிகழ்வுகள்.!

உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மருதமுனை பொது நூலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட சிரமதானம், மரநடுகை, புத்தகக் கண்காட்சி மற்றும் நூல் சேகரிப்பு நிகழ்வுகள் இன்று வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளன.

சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம். சாஹிர் தலைமையில், நூலகர் எஸ்.ஆர்.எம். அமீனுதீன் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் எழுத்தாளர்கள், வாசகர்கள், ஊர்ப் பிரமுகர்கள், நூலகப் பணியாளர்கள் மற்றும் பொது மக்களும் பங்கேற்றிருந்தனர்.

இங்கு இடம்பெற்ற புத்தக கண்காட்சியில் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மாணவர்கள் விஷேடமாக கலந்து கொண்டனர்.

இவர்களுடன் கல்லூரி அதிபர் மற்றும் ஆசிரியர்களும் பங்குபற்றியிருந்தனர்.

-அஸ்லம் எஸ்.மெளலானா

Related posts

ஒவ்வொரு வெள்ளியும் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள்

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

editor

பொதுச் சொத்துக்களை தமது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியுள்ளார்கள் – ஜனாதிபதி அநுர

editor