உள்நாடு

பெக்கோ சமனின் மனைவியின் விளக்கமறியல் நீடிப்பு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷானியை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அன்றைய தினம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பணிப்பாளரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

Related posts

சகல இனத்தவர்களினது பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வுகள் கிட்ட வேண்டும் – சஜித் பிரேமதாச

editor

அனர்த்த நிலைமையை தமிழில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்

editor

மனோராஜபக்சர்களின் அட்டூழியங்களை மன்னிக்க நாம் தயார் இல்லை – மனோ கணேசன்