உள்நாடு

மஞ்சள் மற்றும் இஞ்சி பயிற்செய்கைக்கு விசேட காப்பீட்டுத் திட்டம்

வணிக ரீதியாகவும் ஏற்றுமதி நோக்கங்களுக்காகவும் பயிரிடப்படும் மஞ்சள் மற்றும் இஞ்சி பயிற்செய்கைக்கு விசேட காப்பீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.

விவசாயிகள் தங்கள் “இஞ்சி” பயிற்செய்கைக்கு ஏக்கருக்கு 200,000 ரூபா வரை காப்பீட்டுத் தொகையைப் பெறலாம் என்று அதன் தலைவர் பேமசிறி ஜாசிங்கராச்சி தெரிவித்தார்.

7 சதவீத காப்பீட்டு தவணையை செலுத்துவதன் மூலம், இயற்கை பேரழிவுகள், நோய்கள், பூச்சி சேதம் மற்றும் காட்டு யானை சேதங்களுக்கு காப்பீட்டுத் தொகையைப் பெற முடியும் என்று கூறப்படுகிறது.

மேலும், “மஞ்சள்” பயிற்செய்கையை பாதுகாக்க ஏக்கருக்கு 700,000 ரூபா வரை காப்பீட்டுத் தொகையைப் பெற வாய்ப்புகள் காணப்படுகிறது.

Related posts

உள்ளூராட்சி தேர்தலில் 23 இலட்சம் பேர் அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை – அரசாங்கம் முதல் தடவையாக வீழ்ந்துள்ளது – முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor

முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையிடுவதற்கு தேசிய மக்கள் சக்திக்கு உரிமை இல்லை – முஜிபுர் ரஹ்மான்

editor

கொழும்பில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

editor