உள்நாடுபிராந்தியம்

கல்முனையில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை கடற்கரை வீதியில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று (16) செவ்வாய்க்கிழமை இரவு வேளையில் கல்முனை விசேட அதிரடிப் படையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

கல்முனைக்குடி பகுதியைச் சேர்ந்த 38 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 10 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கைது நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் டி.ஜி.எஸ்.சமந்த டி சில்வாவின் பணிப்புரைக்கமைய, அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் குணசிறியின் அறிவுறுத்தலுக்கமைய, மட்டக்களப்பு வலய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் ஆகியோரின் வழிகாட்டலில், கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி.இஹலகேவின் மேற்பார்வையில் விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-தில்சாத் பர்வீஸ்

Related posts

மேலும் 842,400 பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு

இந்த இக்கட்டான நேரத்தில் நாட்டை விட்டு தனிப்பட்ட இலக்குகளைக் கருத்தில் கொண்டு செயல்படுவது மாபெரும் அழிவின் ஆரம்பமாகும்: ஜனாதிபதி விசேட உரை 

சனல் 4 இல் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து ஆராயும் பாராளுமன்ற குழு!