உள்நாடுபிராந்தியம்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் ட்ரோன் கமராவை பறக்க விட்ட சீன பிரஜை கைது!

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் ட்ரோன் கமராவை பறக்க விட்ட சீன பிரஜை ஒருவர் தலதா மாளிகை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சீன பிரஜை ட்ரோன் கமரா மற்றும் அதனை பறக்க விட பயன்படுத்திய பொருட்களுடன் கண்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான சீன பிரஜை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் அமைந்துள்ள தியவடன நிலமேவின் வீட்டை அண்டிய பகுதியில் ட்ரோன் கமராவை பறக்க விட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நேர்முக பரீட்சைக்கு சென்ற பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் – நிதி நிறுவன முகாமையாளருக்கு சிறைத்தண்டனை

editor

கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் : இருவர் கைது

“மத நிலையங்களை சோதனையிட நடவடிக்கை”