கொழும்பு கோட்டையில் ஒரு ஹோட்டலின் கழிப்பறையில் உள்ள குப்பைத் தொட்டியில் 17 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளது.
கழிப்பறையைச் சுத்தம் செய்யும்போது குப்பைத் தொட்டியில் தோட்டாக்கள் இருப்பதை துப்புரவு செய்த ஊழியர்கள் கவனித்து, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததாகவும் பின்னர் அவர்கள் தமக்குத் தகவல் வழங்கியதையடுத்து அங்கு சென்று அதை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட இந்த தோட்டாக்களைப் பரிசோதித்தபோது, அவை 9மிமீ தோட்டாக்கள் என்பது தெரிய வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாரோ ஒருவர் கழிப்பறைக்குள் இரகசியமாக நுழைந்து, இவற்றைக் குப்பைத் தொட்டியில் கொட்டியிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
