உள்நாடு

தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து – ஒருவர் பலி – ஆறு பேர் காயம்

தெற்கு அதிவேக வீதியில் கலனிகமவுக்கும் கஹதுடுவைக்கும் இடையே நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறிக்கு பின்னால் பயணித்த வேன் இன்று (16) அதிகாலை மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

விபத்தில் காயமடைந்த வேனின் சாரதி, ஆண் ஒருவர் மற்றும் இரண்டு பெண்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மூன்று குழந்தைகள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 35 வயதுடைய பெண் ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சடலம் ஹோமாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மேலும் ஒரு தொகை சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

அமைச்சர் பதவிகளை எடுப்பது கட்சியின் முடிவுக்கு எதிரானது

இஷாரா செவ்வந்தியை இன்றும் விசாரணைகளுக்காக அழைத்து சென்ற பொலிஸார்

editor