உள்நாடுபிராந்தியம்

பெக்கோ சமனின் நெருங்கிய கூட்டாளி அதிரடி கைது!

தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் மற்றொரு நெருங்கிய கூட்டாளியும் இன்று (14) கைது செய்யப்பட்டார்.

39 வயதான குறித்த சந்தேக நபரை தங்காலை குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் சூரியவெவவில் வைத்து கைது செய்துள்ளனர்.

அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 40 தோட்டாக்களும், 250 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர், சூரியவெவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related posts

பொதுத்தேர்தல் குறித்த மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

கடமைகளை பொறுப்பேற்ற ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர்

எரிபொருள் கப்பல் இன்று நாட்டுக்கு