உள்நாடு

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜீப் வண்டிகளுடன் இரண்டு பேர் கைது

வாகன உரிம பத்திரம் இல்லாமல் மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழுவில் தரவு அமைப்பில் தவறான தரவுகளைப் பதிவு செய்து வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜீப் வண்டிகளுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

மெனிக்ஹின்ன பொலிஸ் பிரிவு மற்றும் வத்தேகம பொலிஸ் பிரிவில், கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மெனிக்ஹின்ன மற்றும் வத்தேகம பகுதிகளைச் சேர்ந்த 38 மற்றும் 58 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று சனிக்கிழமை (13) தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாளை திங்கட்கிழமை (15) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related posts

கொரோனா : சந்தேகிக்கப்படும் 103 பேர், 15 மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு

லங்காபுர பிரதேச செயலகம் மீண்டும் திறப்பு

சவால்களை எதிர்கொள்ளக் கூடிய புதிய திட்டங்களோடு பயணிப்பதற்கு மட்டு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம் தீர்மானம்

editor