உள்நாடுபிராந்தியம்

விபத்தில் சிக்கிய முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பலி

திருகோணமலை அனுராதபுர சந்தி விபுலானந்த பாடசாலைக்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடவையில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. நாகேஸ்வரன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூதூர் சம்பூரிலிருந்து மரணச் சடங்கு ஒன்றுக்கு பஸ்ஸில் வருகை தந்து பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த பெண்ணொருவர் மோதியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்விபத்தில் மூதூர் சம்பூர் பகுதியைச் சேர்ந்த கே.நாகேஸ்வரன் (71வயது) உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-அப்துல்சலாம் யாசீம்

Related posts

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

editor

ரஷ்யாவிடம் கடன் கோருகிறது இலங்கை

ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் நாளை முதல் சட்டப்படி வேலையில்