உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்திற்குள் காட்டு யானைகள் அட்டகாசம்!

மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பு அமலபுரம் பகுதியில் இரவு வேளையில் மக்கள் குடியிருப்புக்குள் நுழைந்த காட்டு யானைகள் இரவு வேளையில் வேலிகளை சேதப்படுத்திபயதுடன் பயன்தரும் மரங்கள் உள்ளிட்ட விவசாய நிலங்களை சேதப்படுத்தியுள்ளது.

காட்டு யானைகளின் வருகை நகர் பகுதியில் அதிகரித்து காணப்படும் நிலையில் அதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

புதுக்குடியிருப்பு பகுதிக்குள் நான்கு காட்டு யானைகளும் ஊடுருவியிருக்கும் நிலையில் குறித்த யானைகளை வன இலாகா அதிகாரிகள் அப்புறப்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டு வந்த போதிலும் யானைகள் குறித்த பகுதியிலேலே சஞ்சரித்து வருகின்றது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த யானைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையினை விரைவாக முன்னெடுக்க வேண்டுமென புதுக்குடியிருப்பு அமலபுரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related posts

கூட்டுறவு சேவை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இராஜினாமா

இஸ்ரோ வெளியிட்ட புதிய அறிவிப்பு!

எனது மகளுக்கும் மருமகனுக்கும் காதல் தொடர்பில்லை – கடத்தப்பட்ட மாணவியின் தந்தை கூறுகிறார்

editor