அரசியல்உள்நாடு

பலஸ்தீன மக்களை இலக்கு வைத்து பாரிய இன அழிப்பு, மனித படுகொலை செயற்பாட்டை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

பலஸ்தீன் மக்களின் உரிமையை பாதுகாக்க அதனை காப்பதற்கு அந்த உரிமைக்காக முன்னிட்பதற்காகவும், பலஸ்தீன் மக்களின் உரிமைக்காக முன்னிட்பது அது நீதியான சாதாரணமானது என்பதாலாகும் எனவும், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் இரண்டு நாடுகளாக சமாதானமாக செயற்படுவது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கை மற்றும் வேலைத்திட்டம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பலஸ்தீன் மக்கள் இன்று இஸ்ரேல் அரசாங்கத்தின் அரச பயங்கரவாதத்துக்கு முகம்கொடுத்து வருவதாகவும், சிறு குழந்தைகள் முதல் தாய்மார்கள் பெண்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சிவில் பிரஜைகள் இன்று காஸா பகுதியில் இனப்படுகொலைக்கு உள்ளாகி வருவதாகவும், இந்த இப்படுகொலையை வன்மையாக கண்டிப்பதாகவும், இரண்டு நாடுகள் அமைதியான முறையில் செயற்பட வேண்டும் எனவும், அது அவ்வாறு இடம்பெறும் வரை, பலஸ்தீன மக்களின் உரிமை பாதுகாக்கப்படும் வரை, மனித படுகொலை செய்கின்ற, அரச பயங்கரவாத கலாசாரம் முடிவடையும் வரை, இங்கு மனித படுகொலை செய்கின்ற அரச பயங்கரவாத கலாசாரத்தை செயற்படுத்துகின்றவர்களுடன் எந்தவித நற்புறவும் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கை மற்றும் நிலைப்பாடு எனவும், எந்த அழுத்தங்களுக்கும் இந்த நிலைப்பாட்டை மாற்ற முடியாது எனவும், பலஸ்தீன மக்களை இலக்குவைத்து செயற்படுத்தும் பாரிய இனஅழிப்பு, மனித படுகொலை செயற்பாட்டை நிறுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

வீதியை விட்டு விலகி தடம்புரண்ட டிப்பர் வாகனம்

editor

ஹரின் மீண்டும் UNP இல் இணைகிறார்

அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து சபாநாயகர் அதிரடி அறிவிப்பு!

editor