உள்நாடுவிசேட செய்திகள்விளையாட்டு

மன்னார் தெளபீக் தாஹிர், பங்களாதேஷ் கரப்பந்தாட்ட சுற்றுத் தொடருக்கு தெரிவு

இலங்கை இரானுவ கழகத்தில் தேசிய அணியில் விளையாடும் மன்னார் மாவட்டம் கொண்டச்சியை சேர்ந்த தெளபிக் தஹிர் தற்போது பங்களாதேஷ் கரப்பந்தாட்ட சுற்றுத் தொடருக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்

கொண்டச்சி ஹமீதியா விளையாட்டுக் கழகத்தில் பந்து உயர்த்துனராக ஆரம்ப காலகட்டத்தில் சிறப்பாக விளையாடி அக் கழகத்திற்கும் பல வெற்றிக்கின்னங்களையும் பெற்று தந்த இவர், கல்பிட்டி பள்ளிவாசல் துறை லிவர் புல் கழகத்தின் பந்து உயர்த்துனரும் தற்போது இராணுவ கழகத்தின் பந்து உயர்த்துனராகவும் அவரது திறமையை வெளிப்படுத்தி விளையாட்டில் முன்னேறி இருக்கின்றார்.

ஊரிற்கும் இந் நாட்டிற்கும் பெருமை சேர்கும் வகையில் பங்களாதேஷ் நாட்டில் நடைபெற உள்ள கரப்பந்தாட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டு எதிர் வரும் 20ஆம் திகதி செல்ல இருக்கின்றார்.

அவர் இந் நாட்டிற்கும் கொண்டச்சி கிராமத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று அவரை வாழ்த்துன்கிறோம்.

Related posts

சங்கக்காரவின் பதவிக்காலம் நீடிப்பு

பல்கலைக்கழக புலமைப்பரிசில் வங்கிக்கணக்குகளில் வைப்பு

உள்ளூராட்சி சபை தேர்தல் நிலவரம்