அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதித்து நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (12) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரத்தன தேரரை தலா 500,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அபே ஜன பல கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறுவதற்காக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் வேதனிகம விமலதிஸ்ஸ தேரரை கடத்தி அச்சுறுத்தியதாக ரத்தன தேரர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related posts

சவாலை ஏற்கத் தயார் என தலதா அத்துகோரள அறிவிப்பு

editor

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு வௌிநாட்டு பயணத்தடை

editor

அர்ஜுன் மஹேந்திரன் பெயரை மாற்றியுள்ளார் – இன்டர்போல்