அரசியல்உள்நாடு

நிதி முகாமைத்துவம் சுயாதீனமாக உள்ளதா? இல்லையா? என்பது குறித்து சிக்கல் நிலை – ஹர்ஷ டி சில்வா எம்.பி

ஒரு சுயாதீன நிறுவனமான இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் நிதி முகாமைத்துவம் சுயாதீனமாக உள்ளதா? இல்லையா? என்பது குறித்து சிக்கல் நிலை காணப்படுவதாக பொது நிதிக் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் வரவு செலவு மதிப்பீட்டைப் பற்றி கலந்துரையாடுவதற்காக பொது நிதிக் குழுவிற்கு அழைக்கப்பட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது கருத்துரைத்த ஹர்ஷ டி சில்வா,

“எனக்குத் தெரிந்தவரை, இங்கே ஒரு பெரிய சிக்கல் உள்ளது.

சுயாதீனம் என்றால் என்ன என்பதுதான் அடிப்படைப் பிரச்சினை.

நிதி நிர்வாகத்தில் ஒருவருக்கு சுயாதீனம் இல்லையென்றால், சுயாதீனம் எங்கே என்ற கேள்வி எழுகிறது.

இவர்களுக்கு உள்ளது அதிகாரத்தை எவ்வாறு அமுல்படுத்த வேண்டும் என்பது. எனவே தேவையான பணிக்குழாம் யார்…? அதை நியமிக்கவும்.” என்றார்.

இதன் பின்னர் உரையாற்றிய இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க, ஆணைக்குழுவிற்கு அர்ப்பணிப்புள்ள பணியாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றாலும், சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகும் அதைச் செய்ய முடியவில்லை என்று கூறினார்.

அதன் பின்னர் உரையாற்றிய நிதியமைச்சின் பிரதிச் செயலாளர் ஏ.கே. செனவிரத்ன, ஹர்ஷ டி சில்வா கூறிய கருத்திற்கு அமைய இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் நிதி முகாமைத்துவம் சுயாதீனமாக உள்ளதா? இல்லையா? என்பது குறித்து சிக்கல் இருப்பதாகக் கூறினார்.

Related posts

ஈஸ்டர் தாக்குதலும் அரசின் காய் நகர்த்தல்களும் [VIDEO]

பொட்டாசியம் உரத்தை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை – பிரதமர் ஹரினி

editor

இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு படகில் தப்பிச் செல்ல உதவிய நபர் கைது

editor