வகைப்படுத்தப்படாத

அனர்த்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ள மக்களுக்கு 24 நாடுகள் உதவி

(UDHAYAM, COLOMBO) – அனர்த்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ள மக்களின் வாழ்க்கையை கட்டி எழுப்பும் பொருட்டு 24 நாடுகள் இதுவரையில் நிவாரண பொருட்கள் மற்றும் நிதியுதவிகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனை குறிப்பிட்டார்.

இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், சீனா மற்றும் ரஸ்யா உள்ளிட்ட 134 நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இலங்கையின் எதிர்கால பயணத்திற்கு வலுவூட்டும் வகையில் ஆதரவினை வழங்கவுள்ளதாக தூதுவர்களும், உயர்ஸ்தானிகர்களும் உறுதியளித்ததாக ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.

Related posts

ඇෆ්ගනිස්තාන  නායකත්වය රෂිඩ් ඛාන්ට

பாகிஸ்தான் இராணுவ பதவிநிலை அதிகாரி – ஜனாதிபதி சந்திப்பு

One-day service of Persons Registration suspended for today