பலாங்கொடை எல்லெபொல பகுதியில் நேற்று (10) மாலை இடம்பெற்ற விபத்து ஒன்றில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 24 வயது இளம் பெண் ஒருவர் பரிதாபமாக பஸ் சில்லுகளில் சிக்கி உயிரிழந்தார்.
பஸ் வண்டியை முந்தி செல்ல முயற்சித்த இவர் எதிரே வந்த லொரியை கண்டு அஞ்சி தடுமாறியதால் வழுக்கிச் சென்று அதே பஸ் வண்டியில் சிக்கி பலியாகியுள்ளார்.
