அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரை சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்

மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வில் பங்கேற்க ஜெனீவா சென்றுள்ள அமைச்சர் விஜித ஹேரத்துக்கும், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் துர்க்கிற்கும் இடையே இன்று (10) ஒரு சந்திப்பு நடைபெற்றது.

அங்கு, வோல்கர் துர்க் சமர்ப்பித்த அறிக்கை குறித்து அவர்கள் விரிவாக விவாதித்தனர்.

அறிக்கை தொடர்பான இலங்கையின் நிலைப்பாட்டை அமைச்சர் விஜித ஹேரத் விரிவாக விளக்கியுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த கால மனித உரிமைகள் மீறல்கள் குறித்து சுயாதீன விசாரணையை நடத்தி பொறுப்புக்கூறல் பொறிமுறையை முறையாக நிறுவ இந்த வாய்ப்பு தவறவிடப்படாது என்றும் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related posts

ஜயம்பதி விக்ரமரத்ன இராஜினாமா

கல்விக்காக ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகை இந்த வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது – பிரதமர் ஹரிணி

editor

பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலை உணவுகளின் விலையும் அதிகரிப்பு