வெல்லவாய – தணமல்வில பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்துச் சபையின் யாலபோவ டிப்போவுக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (08) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறி மற்றும் கார் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது காரில் பயணித்த இருவர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதவேளை கடந்த வியாழக்கிழமை இரவு எல்ல வெல்லவாய வீதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில் 17 பேர் காயமடைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
