எல்ல பகுதியில் சுற்றுலா சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில், எல்ல-வெல்லவாய வீதியில் 15 ஆவது மைல் கல்லை அண்மித்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07) தங்கல்ல பகுதியில் அமைந்துள்ள அவர்களினது வீடுகளுக்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட பஸ்ஸின் சாரதி, தங்கல்ல நகர சபை செயலாளர், நகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பலர் உயிரிழந்தனர்.
விபத்தில் பலியானோர் தங்கல்ல நகர சபை பகுதியைச் சேர்ந்தவர்கள் உட்பட கதுருபோகுண, அரன்வல, ஹெட்டமான்ன, பள்ளிக்குடாவ, தேனகம, பெலியத்த போன்ற பகுதிகளில் வாழ்ந்த மக்கள் ஆவர்.
இவர்களினது வீடுகளுக்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்திய எதிர்க்கட்சித் தலைவர், அக்குடும்ப அங்கத்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.
வீடியோ
