உள்நாடுபிராந்தியம்

17 வயதுடைய பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி பலி!

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுகவெல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு சென்றுள்ள நிலையில் மாணவர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான சுகபோக வாகன ஏலத்தின் முதற் கட்டம் ஆரம்பம்

editor

கொழும்பின் சில பகுதிகளுக்கு 16 மணித்தியால நீர்வெட்டு

ஓய்வூதியம் பெறுவோருக்கு இலவச பயணச் சீட்டு வழங்கும் நிகழ்வு ஆரம்பம் [PHOTO]