உள்நாடுபிராந்தியம்

எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து – தாயும், குழந்தையும் காயம்!

கொழும்பு கொலன்னாவையிலிருந்து கொட்டகலை பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் சேமிப்பு களஞ்சியத்துக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு சிறு குழந்தையும், தாயும் காயமடைந்ததாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (05) மாலை 5:00 மணியளவில் ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் செனன் தோட்டப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் வாகனத்தை,  முச்சக்கர வண்டி முந்திச் செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

குறித்த ஆட்டோவில் சிறு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பயணித்துள்ளனர். விபத்தில் ஒரு சிறு குழந்தையும், தாயும் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

பின்னர் இவர்கள் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

விபத்தில் முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், பவுசரில் இருந்து எரிபொருளை இறக்கிய பின்னர், பவுசரின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

-க.கிஷாந்தன்

Related posts

புத்தாண்டிற்கு முன்னர் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம் – விஜயதாச

சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று சந்திப்பு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா அதிரடி முடிவு!