உள்நாடுபிராந்தியம்வீடியோ

எல்ல பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் அஞ்சலிக்காக தங்காலை நகர சபையில்

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பஸ் விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களின் உடல்கள் தங்காலை நகர சபைக்கு கொண்டுவரப்பட்டு, இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு வைக்கப்பட்டுள்ளன.

இதுவரை 10 பேரின் உடல்கள் நகர சபைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தங்காலை பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணமாக சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற பஸ், நேற்று முன்தினம் (04) எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் 24வது கிலோமீற்றர் தூண் அருகே உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் தங்காலை நகர சபை செயலாளர் டி.டபிள்யூ. கே. ரூபசேன உட்பட நகர சபையின் 12 ஊழியர்கள், 2 குழந்தைகள் மற்றும் பஸ் சாரதி ஆகியோர் உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்த 18 பேர் பதுளை போதனா வைத்தியசாலை, பண்டாரவளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீடியோ

Related posts

அனுரவுக்குப் பின்னால் அலைவோர் அடுத்த ஆபத்தை உணராதுள்ளனர் – ரணிலுடன் இணைந்தோர் ஒட்டைப்பைகளுடனே சென்றுள்ளனர் – புத்தளத்தில் ரிஷாட் எம்.பி

editor

BREAKING NEWS – அமைச்சரவையில் மாற்றம் – முனீர் முழப்பர் | சமய விவகார பிரதி அமைச்சர் – அர்கம் இல்யாஸ் | மின் சக்தி பிரதி அமைச்சர்

editor

பொலிஸார் உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!