உள்நாடு

கொழும்பில் இரு இடங்களில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு, கிரேண்ட்பாஸ் பகுதியில் நேற்று இரவு (05) நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் களனியைச் சேர்ந்த 26 வயது நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.

ரிவோல்வர் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதற்கிடையில், மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஞ்சிகாவத்தை வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கிக்கு முன்பாக இன்று (06) அதிகாலை நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related posts

தபால் ஊழியர்கள் இன்று முதல் மேலதிக நேர பணிப்புறக்கணிப்பில்

கைவாறை விடுத்து செயல் மூலம் வேலையைக் காட்ட வேண்டும் – சஜித் பிரேமதாச

editor

இன்றும் அரசியலமைப்பின் 21வது திருத்தம் அமைச்சரவைக்கு