உள்நாடுபிராந்தியம்

எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து – ஜீப் வண்டியின் சாரதி கைது

15 பேர் உயிரிழந்த எல்ல – வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பேருந்து எல்ல திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கி பயணித்த போது எதிரே வந்த ஜீப் வண்டியில் மோதி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பாக குறித்த ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 9.00 மணியளவில் இடம்பெற்ற இந்த பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

20 ஆவது அரசியலமைப்பு : நாளை பாராளுமன்றுக்கு

இந்தியாவின் தலையீட்டால் ஆறு வருடங்களாக முடியவில்லை

சாய்ந்தமருது கடல் அரிப்புக்கு உடனடி தீர்வு – கரையோரம் பேணல் திணைக்களம்.