உள்நாடு

கொழும்பில் 9 மணிநேரம் நீர்வெட்டு – வெளியான அறிவிப்பு

திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 09 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்த நீர்வெட்டு எதிர்வரும் சனிக்கிழமை (06) காலை 10.30 மணி முதல் இரவு 07.30 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, கொழும்பு 01 முதல் 15 , பத்தரமுல்ல, பெலவத்த, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டை, இராஜகிரிய, மிரிஹான, மெதிவெல, நுகெகொடை, நாவல, மஹரகம, பொரலஸ்கமுவ, இரத்மலானை,தெஹிவளை, மொரட்டுவை ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் உள்ளது – அரசாங்கம் பயந்து கொண்டு இழுத்தடிக்கிறது – எம். ஏ சுமந்திரன்

editor

திலினியின் பண மோசடி விவகாரம் : பிரபல சிங்கள நடிகையிடம் விசாரணை