உள்நாடு

மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பதற்கான புதிய சுற்றுநிருபம்!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, தரம் 2 முதல் தரம் 11 வரையிலான மாணவர்களை (தரம் 5 மற்றும் தரம் 6 தவிர்த்து) பாடசாலைகளில் சேர்ப்பதற்கான புதிய சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முன்மொழியப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தங்களை செயற்படுத்த, அங்கீகரிக்கப்பட்ட வரம்புகளுக்குள் வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை பராமரிப்பது அவசியம்.

நாட்டின் அனைத்துப் பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதி செய்யும் அதேவேளை, தரம் 5 மற்றும் 6 தவிர்த்து, பாடசாலைகளில் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களைச் சேர்க்கும் வாய்ப்பை வழங்குவதற்கான முறையான வழிமுறையை அறிமுகப்படுத்துவது பொருத்தமானது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதன்படி, பல்வேறு காரணங்களுக்காக தங்கள் தற்போதைய பாடசாலைகளிலிருந்து வேறொரு பாடசாலைக்கு உண்மையிலேயே மாற்ற வேண்டிய மாணவர்களுக்கு இடைநிலை தரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கும் வகையில் புதிய சுற்றறிக்கை வழிமுறைகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

மாணவர்கள் இடையே அதிகரிக்கும் புற்றுநோய் – எச்சரிக்கும் வைத்தியர்கள்.

அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதியின் தவறான முடிவு – பொதுஜனபெரமுன

ரணில்-தமுகூ சந்திப்பில் உரையாடப்பட்டது என்ன?

editor