அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வீடு CIDக்கு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தற்போது வசித்து வரும் கொழும்பு விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) ஒப்படைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்குவதற்கான புதிய சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர் இந்த வீட்டை குற்றப் புலனாய்வுத் துறையிடம் புதிய வசதிகளுடன் கூடிய பணியிடமாக ஒப்படைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியங்களைத் தவிர, அதிகாரபூர்வ குடியிருப்புகள் உட்பட மற்றைய அனைத்து வசதிகளும் இரத்துச் செய்யப்படும்.

முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்கும் புதிய சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் இன்று (04) அல்லது நாளை சபாநாயகரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்க்ஷ தற்போது வசித்து வரும் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வசித்து வந்தார்.

அதற்கு முன்னர், பல அமைச்சர்கள் அங்கு வசித்து வந்தனர்.

Related posts

ஒரு பால் திருமண விவகாரம் – எதிர்கால சந்ததியினரை பாதிக்கும் – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வன்மையாக கண்டிக்கிறது

editor

தப்பியோடியவர்களுக்கு நாட்டின் பொருளாதாரம் பற்றி பேச உரிமை இல்லை – நிதி இராஜாங்க அமைச்சர்!

பாலித ரங்கே பண்டாரவின் கருத்து : அவ்வாறான தீர்மானம் கட்சிக்கு நல்லதல்ல – நவீன் திசாநாயக்க