உள்நாடு

வேலை நிறுத்த போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

இரத்தினபுரி போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர்களுக்கு எதிராக திட்டமிட்டு சில செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.

அவரை பணியிடை நிறுத்தம் செய்து விசாரணைகளை முன்னெடுக்காவிட்டால் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் வேலை நிறுத்தம் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

கொழும்பிலுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்தியர் வாசன் இரட்ணசிங்கம் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் இரண்டு நாட்களாக வைத்தியர்களால் வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வைத்தியசாலை பணிப்பாளரின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வைத்தியர்களும் வைத்திய நிபுணர்களும் பணிப்பாளரது தீர்மானத்தால் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சு இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் வழங்கிய வாக்குறுதியை நம்பி கடந்த வாரம் நாம் முன்னெடுக்கவிருந்த வேலை நிறுத்த நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தினோம்.

ஆனாலும் இன்னும் இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படவில்லை. இதன் காரணமாகவே இவ்வாரம் வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இரத்தினபுரி போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர்களுக்கு எதிராக திட்டமிட்டு சில செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.

இவரை இந்த வைத்தியசாலையிலிருந்து நீக்கி உடனடி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். அவர் பணிப்பாளராக பணிபுரியும் போது அவருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாது.

எனவே இந்த பிரச்சினைக்கு சுகாதார அமைச்சினால் துரித தீர்வு வழங்கப்படாவிட்டால் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்ற ரீதியில் எமது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என எச்சரிக்கின்றோம் என்றார்.

-எம்.மனோசித்ரா

Related posts

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களுக்கான அறிவித்தல்

ஜனாதிபதி தலைமையில் 110 நிறுவனங்களுக்கு விருதுகள்

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

editor