உள்நாடுபிராந்தியம்

மன்னாரில் விசேட சுற்றிவளைப்பு – பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்பு

பொலிஸ் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 900 கிலோகிராமுக்கு அதிக அளவிலான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது

மன்னார் பகுதியில் பொலிஸ் மற்றும் கடற்படையினரினால் இணைந்து முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே, குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

மன்னார் கடற்பகுதியூடாக படகு மூலம் இந்த கேரள கஞ்சா நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட நிலையில், சுற்றிவளைப்பை முன்னெடுக்கும் சந்தர்ப்பத்தில் மீன்பிடி படகில் இருந்த நபர் தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வன்னி பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சாமந்த விஜய சேகரிவின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related posts

இந்திய கடற்படைக்கு சொந்தமான “Dornier 228” இலங்கைக்கு

20 ஆவது அரசியலமைப்பு : நாளை பாராளுமன்றுக்கு

ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் தாயகம் வந்தன