அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று (03) காலை ஆஜரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுமார் 5 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, கடந்த ஓகஸ்ட் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க. எஸ். போதரகம, சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, உரிய வாக்குமூலத்தை அளித்த பின்னர் சற்றுமுன்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரியவருகிறது.

Related posts

பல்கலைக்கழகங்கள் 3ல் கொரோனா பரிசோதனைகள்

நான்கு கொலைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ வீரர் கைது

editor

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 665 ஆக அதிகரிப்பு