உள்நாடுபிராந்தியம்

வீடொன்றில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் இரண்டாம் மாடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளளது.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிர்தௌவ்ஸ் பள்ளி வீதி பிரதேசத்தில் இன்று மதியம் இவ்வாறு அழுகிய நிலையில் உருகுக்லைந்த ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 15 நாட்களாக காணாமல் சென்றிருந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் நீண்ட காலம் நிர்மாணிக்கப்பட்டிரந்த வீடு ஒன்றின் ஒன்றின் 2 ஆம் மாடியில் குறித்த சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதாக வீட்டின் உரிமையாளர் முறைப்பாடு ஒன்றினை பொலிஸாருக்கு வழங்கி இருந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 15 நாட்களாக காணாமல் சென்ற நிலையில் உயவினர்கள் தேடி வந்ததுடன் சம்மாந்துறை பிரதேசத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட 55 வயது மதிக்கத்தக்கவர் என தற்பொது அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மனநிலை பாதிக்ககப்பட்ட இவர் சகோதரி ஒருவரின வீட்டியல் தங்கி இருந்த நிலையில் காணாமல் சென்றிருந்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இரந்து தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-பாறுக் ஷிஹான்

Related posts

2024 இல் இரு தேர்தல்களும் இடம்பெறும் – ஜனாதிபதி அறிவிப்பு.

பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்கான வெற்றிடங்கள் பூர்த்தி

வெள்ளம் மற்றும் மண்சரிவு தொடர்பான அவசர எச்சரிக்கை

editor