உள்நாடு

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் வீதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இன்று (03) இடம்பெற்றுள்ளது.

வணிக இடத்தில் இருந்த இளைஞன் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞன், சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தேங்காய் திருடச் சென்ற இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு

editor

அம்பாறையில் மீண்டும் மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

editor

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக்கூடிய திகதிகள் தொடர்பில் அவதானம்

editor