உள்நாடு

பஸ்ஸிலிருந்து கீழே வீழ்ந்த பெண் வைத்தியர் 14 நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்த சோகம்

தனியார் பயணிகள் பஸ்ஸின் மிதிபலகையிலிருந்து வீதியில் வீழ்ந்ததால் காயமடைந்து
இரத்தினபுரி போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் மருத்துவர் 14 நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இரத்தினபுரி போதனா மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பெல்மதுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் இரத்தினபுரி மொரகஹவைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு குழந்தையின் தாயான மதரா மதுபாஷினி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 19 ஆம் திகதி மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியில் உள்ள பெல்மதுல்ல பொலிஸ் நிலையத்துக்கு அருகில் தனியார் பயணிகள் பஸ்ஸில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இவர் பஸ் மிதிபலகையிலிருந்து தவறி வீழ்ந்துள்ளார்

முச்சக்கர வண்டி ஒன்றுக்கு வழி விடுவதற்காக பஸ் சாரதி பிரேக் போட்டபோது, ​​இவர் தூக்கி எறியப்பட்டு வீதியில் வீழ்ந்ததாக பிரேத விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related posts

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு விஜித ஹேரத்துக்கு உத்தரவு

editor

மின் – வலுசக்தி பிரச்சினை மீது இன்று விவாதம்

இராஜகிரிய வாகன விபத்து – இருவருக்கு பிணை