அரசியல்உள்நாடு

Dream Destination வேலைத் திட்டத்தின் முதலாவது புகையிரத நிலையத்தை நவீன மயப்படுத்தும் பணிகள் ஆரம்பம்

Dream Destination திட்டத்தின் முதலாவது புகையிரத நிலையம் நவீனமயப்படுத்தல் ஆரம்பம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் ஆகியன ஒன்றிணைந்து தனியாரின் ஒத்துழைப்புடன் அரச – தனியார் பங்குடமை (public – private partnership) திட்டமாக 100 புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன் முதலாவது வேலைத் திட்டம் இன்று (02) காலையில் ஆரம்பிக்கப்பட்டதுடன் ஸ்டார் ஆடைத் தொழிற்சாலையின் நிதி பங்களிப்புடன் காலி தல்பே புகையிரத நிலையத்தை நவீன மயப்படுத்தும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

விசேட தேவைகளுடன் சமூகங்களையும் உள்ளடக்கியதாக சகல பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சௌகரியமான வசதிகளை வழங்கும் சுத்தமான, அழகான புகைரத நிலையக் கட்டமைப்பை நாட்டில் உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்நிகழ்வில் போக்குவரத்து பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, மீன்பிடி மற்றும் நீரியல் வள பிரதி அமைச்சர் ரத்ன காமகே, கோப் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய நிஷாந்த சமரவீர, புகையிறத பொது முகாமையாளர் பொறியியலாளர் லலித் லக்மீன சமரசேகர உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 344 : 05 [COVID UPDATE]

எனது அமைச்சு பதவியிலிருந்து நீங்கிவிட்டேன் – காஞ்சன விஜேசேகர

editor

லக்‌ஷமன் கிரியல்லவின் குடும்ப வழக்கு தள்ளுபடி!