உள்நாடுபிராந்தியம்

மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் தீ பரவல்!

மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் இன்று திங்கட்கிழமை (01) பகல் 12.30 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

மின் ஒழுக்கு காரணமாக இவ் தீ பரவல் ஏற்பட்டிருக்கலாமென தெரியவருகிறது.

மின் ஒழுக்கு ஏற்பட்டு களஞ்சியசாலையில் தீ பரவியதையடுத்து பொதுமக்கள், பிரதேச சபை ஊழியர்கள், பாடசாலை ஆசிரியர்கள் இணைந்து நீரிணைக் கொண்டு அணைத்து தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

சுமார் அரை மணி நேர போராட்டத்தின் பின்னர் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்போது மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் காணப்பட்ட கதிரை,மேசை,ஏனைய பெறுமதியான பல உபகரணங்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளன.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

பங்களாதேஷிலிருந்த 276 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

ஒருபோதும் கபட அரசியலில் ஈடுபட மாட்டோம் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

பல பகுதிகளில் மின்சாரம் தடை

editor